/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெண் குழந்தையை விற்பனைக்காக பதுக்கிய 2 பெண்கள் சுற்றிவளைப்பு பெண் குழந்தையை விற்பனைக்காக பதுக்கிய 2 பெண்கள் சுற்றிவளைப்பு
பெண் குழந்தையை விற்பனைக்காக பதுக்கிய 2 பெண்கள் சுற்றிவளைப்பு
பெண் குழந்தையை விற்பனைக்காக பதுக்கிய 2 பெண்கள் சுற்றிவளைப்பு
பெண் குழந்தையை விற்பனைக்காக பதுக்கிய 2 பெண்கள் சுற்றிவளைப்பு
ADDED : செப் 01, 2025 07:21 AM

பவானி : விற்பனைக்காக பெண் குழந்தையை வீட்டில் பதுக்கிய இரு பெண்களை பவானி போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி, பழனிபுரம் நான்காவது வீதியை சேர்ந்தவர் செல்வி, 37. இவரது வீட்டருகே நேற்று நள்ளிரவில், குழந்தை அழும் சத்தம் கேட்டது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல பாதுகப்பு மையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார், செல்வியிடம் விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் ஜானகி, 47; இவர்கள் இருவரும் துணிப்பை தயாரிக்கும் டெய்லர்களாக வேலை செய்கின்றனர். பண பற்றாக்குறை காரணமாக, பெண் குழந்தைகளை அரசு மருத்துவமனை மற்றும் சாலையோரத்தில் பிச்சை எடுப்பவர்களிடம் வாங்கி வந்து, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, கர்நாடகா மாநிலம், பெங்களூரில், ஒன்பது மாத பெண் குழந்தையை வாங்கி வந்து, விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையை மீட்டு, ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு -காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோன்று சில மாதங்களுக்கு முன், நாமக்கல் மாவட்டத்தில் குழந்தையை கடத்தி வந்து, விற்பனை செய்ய முயன்றதாக செல்வி மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இதில், வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரணை நடந்து வருகிறது.