ADDED : ஜூலை 31, 2024 07:07 AM
அந்தியூர்: அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து ரவுண்டானா பத்ரகாளியம்மன் கோவில் வரக்கூடிய சாலையில், 'நம்ம அந்தியூர்' என்றும், தவிட்டுப்-பாளையத்தில் இருந்து அந்தியூர் ரவுண்டா-னாவை நோக்கி வரும் போது, 'ஐ லவ் அந்தியூர்' என மற்றொரு செல்பி பாயிண்டும் வைக்கப்பட்-டுள்ளது.
இந்த இரண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். டவுன் பஞ்., தலைவர் பாண்டியம்மாள் மற்றும் கட்சியினர், டவுன் பஞ்., நிர்வாகிகள் கலந்து கொண்டு, பெயர் பலகை முன் செல்பி எடுத்து கொண்டனர்.