/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வெள்ளகோவில் அருகே லாரி மீது- அரசு பஸ் மோதி 2 பயணிகள் பலி வெள்ளகோவில் அருகே லாரி மீது- அரசு பஸ் மோதி 2 பயணிகள் பலி
வெள்ளகோவில் அருகே லாரி மீது- அரசு பஸ் மோதி 2 பயணிகள் பலி
வெள்ளகோவில் அருகே லாரி மீது- அரசு பஸ் மோதி 2 பயணிகள் பலி
வெள்ளகோவில் அருகே லாரி மீது- அரசு பஸ் மோதி 2 பயணிகள் பலி
ADDED : ஜூன் 07, 2025 01:37 AM
காங்கேயம், திருச்சியில் இருந்து திருப்பூருக்கு, கரூர் பணிமனையை சேர்ந்த அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு, 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. டிரைவர் சசிகுமார், 51, பஸ்சை ஓட்டினார். திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில், வெள்ளகோவில் அடுத்த குருக்கத்தி பகுதியில், நள்ளிரவு 12:00 மணியளவில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த சிமெண்ட் மூட்டை ஏற்றிய லாரி மீது பஸ் மோதியது.
இதில் பஸ்சில் பயணித்த ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பவின், 6; கும்பகோணத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வன், 50, சம்பவ இடத்தில் பலியாகினர். கண்டக்டர் பாலசுப்பிரமணி, 50, வெள்ளகோவிலை சேர்ந்த சுதா, 35, உள்பட, ௧௨ பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அனைவரும் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கார்த்திக், 44, என்பவரை, வெள்ளகோவில் போலீசார் கைது செய்தனர்.