ADDED : ஜூன் 23, 2025 05:15 AM
புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டியை அடுத்த சுங்கக்காரன் பாளையம் பிரிவை சேர்ந்தவர் காளிமுத்து, 50; அரசு பஸ் டிரைவர். சில தினங்களுக்கு முன் தனது ஹீரோ ஹோண்டா பைக்கை, தோட்-டத்து வீட்டு முன் நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்த ஆசாமிகள் வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்-றனர்.
புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார், வாகன திருடர்-களை தேடி வந்தனர். இது தொடர்பாக பாறைபுதுார் மாதேஸ்-வரன், 27; நீலிபாளையம் சதீஷ், 29, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இருவரையும் சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.