Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 2 மாணவி, நர்ஸ் மாயம்

2 மாணவி, நர்ஸ் மாயம்

2 மாணவி, நர்ஸ் மாயம்

2 மாணவி, நர்ஸ் மாயம்

ADDED : மார் 27, 2025 01:36 AM


Google News
2 மாணவி, நர்ஸ் மாயம்

ஈரோடு:ஈரோடு, நத்தகாடையூர், கொமாரபாளையம், ஓலவலசு கிருஷ்ணமூர்த்தி மகள் ஹேமபிரியா, 17; அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த, 25ல் சிவகிரி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வெழுத சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி அறச்சலுார் போலீசார் தேடி வருகின்றனர்.

* பவானி அடுத்த ஒரிச்சேரி, சின்னநாயக்கனுாரை சேர்ந்த தொழிலாளி தம்பிராஜின், 17 வயது மகள், அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ௨ படிக்கிறார். நேற்று முன்தினம் கடைசி தேர்வு நடந்தது. இதற்காக சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்.

* தாளவாடி அருகே காமையன் புரத்தை சேர்ந்த தொழிலாளி ரங்கசாமி மகள் சில்பா, 19; தாளவாடி தனியார் மருத்துவமனை நர்ஸ். கடந்த, 24ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ரங்கசாமி புகாரின்படி தாளவாடி போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us