ADDED : மே 23, 2025 01:02 AM
காங்கேயம், காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில், 20ம் தேதி முதல் ஜமாபந்தி முகாம் நடந்து வருகிறது. ஊதியூர் உள் வட்டத்துக்கு நேற்று முகாம் நடந்தது.
இப்பகுதியை சேர்ந்த மக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்று, பிறப்பு-இறப்பு சான்று தொடர்பாக, 185 மனு அளித்தனர். தாராபுரம் ஆர்டிஓ பெலிக்ஸ் ராஜா மனுக்களை பெற்றார்.
* தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் ஜமாபந்தி முகாமில், அலங்கியம் உள்வட்டத்துக்கு நேற்று மனு பெறப்பட்டது. தாராபுரம் தாசில்தார் திரவியம் தலைமை வகித்து மனுக்களை பெற்றார். அலங்கியம், மணக்கடவு, கொங்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், 198 மனு அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.