Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு ஒதுக்கீட்டில் 182 பள்ளிகளில் 1,725 மாணவ, மாணவிகள் சேர்க்கை

அரசு ஒதுக்கீட்டில் 182 பள்ளிகளில் 1,725 மாணவ, மாணவிகள் சேர்க்கை

அரசு ஒதுக்கீட்டில் 182 பள்ளிகளில் 1,725 மாணவ, மாணவிகள் சேர்க்கை

அரசு ஒதுக்கீட்டில் 182 பள்ளிகளில் 1,725 மாணவ, மாணவிகள் சேர்க்கை

ADDED : டிச 03, 2025 07:45 AM


Google News
ஈரோடு:தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை ஏழை மாணவ, மாணவிகள் பயிலும் வகையில் அரசு, 25 சதவீத ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது.

பிற சமூகத்தினர் குடும்ப ஆண்டு வருவாய், 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு குடும்ப ஆண்டு வருவாய் வரம்பு இல்லை.

இதன்படி மாணவர் சேர்க்கை நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 182 தனியார் பள்ளிகளில், 1,725 மாணவ, மாணவியர் நடப்பாண்டு சேர்ந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பிளஸ் 2 வரை தற்போது சேர்ந்துள்ள பள்ளியிலேயே கல்வியை விரும்பும் பட்சத்தில் தொடரலாம். இதற்கான கல்வி உதவி தொகையை அரசு அளித்து விடும் என்று பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us