Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இலவச வீட்டுமனை கோரி 1,500 மனுக்கள் வழங்கல்

இலவச வீட்டுமனை கோரி 1,500 மனுக்கள் வழங்கல்

இலவச வீட்டுமனை கோரி 1,500 மனுக்கள் வழங்கல்

இலவச வீட்டுமனை கோரி 1,500 மனுக்கள் வழங்கல்

ADDED : ஜூலை 02, 2025 01:17 AM


Google News
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலர் மாரிமுத்து தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் மனு வழங்கி கூறியதாவது: எங்களது அமைப்பு, ஈரோடு மாநகரப்பகுதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில், ஈரோடு பெ.பி.அக்ரஹாரம், பவானி சாலை, மரப்பாலம், வெண்டிப்பாளையம் சாலை என பல்வேறு பகுதியில் வீடு, நிலமின்றி வசிக்கும் மக்களிடம் வீட்டுமனை பட்டா மற்றும் கலைஞரின் கனவு வீடு திட்டத்தில் வீடு கட்டித்தர வலியுறுத்தி மனுக்களை சேகரித்தோம். கடந்த வாரமும், 1,500 மனுக்கள் தாக்கல் செய்தோம். தற்போதும், 1,500 மனு, அதற்கான ஆவணங்களை இணைத்து வழங்கி உள்ளோம்.

இந்த பயனாளிகளில் பெரும்பாலானவர்கள் தினக்கூலிகள், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மையினர், கூலி வேலை செய்வோர். மாநகர பகுதியில் அவர்களுக்கு ஒரே இடத்தில் இடம் கிடைக்காது என்றாலும், ஈரோடை ஒட்டிய பகுதியில் அரசு சார்பில் நிலத்தை வாங்கி, அவர்கள் பங்களிப்புடன் இலவச வீட்டுமனையாக முதலில் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us