ADDED : ஜன 06, 2024 07:28 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கொடிவேரியில்-14 மி.மீ., மழை பதிவானது.பிற இடங்களில் மழை விபரம் (மி.மீ.,ல்): பவானிசாகர்-5.8, கோபி-5.2, சத்தியமங்கலம்-5, குண்டேரிப்பள்ளம்-4, கொடுமுடி-4, சென்னிமலை-4, வரட்டுப்பள்ளம்-3.4, மொடக்குறிச்சி-3, நம்பியூர்-2, ஈரோடு-2, பவானி-1.4. நேற்று முன்தினம் மாலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. லேசான துாரல் விழுந்து கொண்டே இருந்தது. நேற்று காலையிலும் வெயிலின்றி, பனியும், மேகமூட்டமும் சூழ்ந்திருந்தது.* டி.என்.பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான டி.ஜி.புதுார், வாணிப்புதுார், பங்களாபுதுார், கொண்டையம்பாளையம், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதேபோல் அந்தியூர், தவிட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை லேசான சாரல் மழை பெய்தது.