136 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
136 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
136 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 20, 2024 06:29 AM
நம்பியூர் : நம்பியூர், வரப்பாளையம் அடுத்துள்ள இச்சிபாளையம் பகுதியில் தறிப்பட்டறை குடோனில் குட்கா மற்றும் பான்மசாலா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், துரைசாமி என்பவருக்கு சொந்தமான தறிப்பட்டறை குடோனில் சோதனையில் ஈடுபட்டனர்.போலீசார் பார்த்ததும் இருவர், காருடன் தப்பியோடிய நிலையில் ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டம் நிச்சாலா பகுதியை சேர்ந்த நொபாரம், 27, என்பவரை கைது செய்து விசாரித்தனர். இதையடுத்து குடோனில் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 77 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 136 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.