Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆடி மாதம் பிறப்பு அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி மாதம் பிறப்பு அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி மாதம் பிறப்பு அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி மாதம் பிறப்பு அம்மன் கோவில்களில் வழிபாடு

ADDED : ஜூலை 18, 2024 01:18 AM


Google News
ஈரோடு: ஆடி மாத பிறப்பையொட்டி, ஈரோட்டில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆடி மாதப்பிறப்பை ஒட்டி, ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்-கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்-பட்டது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோவிலில் வில்வேஸ்-வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழி-பாடு செய்தனர். சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரி-யம்மன், கொங்காலம்மன், பத்ரகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது.

இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்-றனர். ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றிலும் பக்தர்கள் புனித நீராடி சென்றனர்.

*கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரேயுள்ள குண்டத்தில், பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். அதேபோல், கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில்களில், திரளான பக்-தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

*அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், அதிகாலை நடை திறக்-கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்து. மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பத்ரகாளியம்மன் அருள்பா-லித்தார். அங்காளம்மன் கோவில், தவிட்டுப்பாளையம் செள-டேஸ்வரி அம்மன் கோவில், அழகு முத்துமாரியம்மன் கோவில், ஆப்பக்கூடல், கரட்டுப்பாளையம் ஓங்காளியம்மன் கோவில்-களில் சிறப்பு வழிபாடு நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us