/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விசாரணைக்கு 'டிமிக்கி' இன்ஸ்பெக்டருக்கு 'வாரன்ட்' விசாரணைக்கு 'டிமிக்கி' இன்ஸ்பெக்டருக்கு 'வாரன்ட்'
விசாரணைக்கு 'டிமிக்கி' இன்ஸ்பெக்டருக்கு 'வாரன்ட்'
விசாரணைக்கு 'டிமிக்கி' இன்ஸ்பெக்டருக்கு 'வாரன்ட்'
விசாரணைக்கு 'டிமிக்கி' இன்ஸ்பெக்டருக்கு 'வாரன்ட்'
ADDED : ஜூன் 19, 2024 02:03 AM
கோபி, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு, கோபி நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
கோபி அருகே நஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி, 65; கடந்த, 2022ல் மொபெட்டில், அத்தாணி சாலையில் சென்றார். அப்போது கார் மோதியதில் பலியானார். பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கின் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் இருந்தார்.
கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. நேற்று விசாரணைக்கு வந்தபோது, வடிவேல்குமார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி விஜய் அழகிரி, இன்ஸ்பெக்டர் வடிவேல் குமாருக்கு வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். வடிவேல் குமார் தற்போது கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றுகிறார்.