/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இல்லம் தேடி கல்வி திட்டம் பணியை நீடிக்க வலியுறுத்தல் இல்லம் தேடி கல்வி திட்டம் பணியை நீடிக்க வலியுறுத்தல்
இல்லம் தேடி கல்வி திட்டம் பணியை நீடிக்க வலியுறுத்தல்
இல்லம் தேடி கல்வி திட்டம் பணியை நீடிக்க வலியுறுத்தல்
இல்லம் தேடி கல்வி திட்டம் பணியை நீடிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 09, 2024 02:32 AM
ஈரோடு;இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள், இனியா தலைமையில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், மனு வழங்கி கூறியதாவது: கொரோனா காலத்தில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் நேரடியாக செயல்படாத நிலையில், குழந்தைகளின் கல்வி பாதித்தது. அதனை மேம்படுத்த இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிவித்து தன்னார்வலர்களை கிராமங்களில் நியமித்தனர். மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினர். ஈரோடு மாவட்டத்தில், 900க்கும் மேற்பட்டோரும், மாநில அளவில் ஒரு லட்சம் பேர் வரை பணி செய்கிறோம்.
அந்தந்த பகுதி அரசு பள்ளி, தன்னார்வலர்களின் வீடுகளில் செயல்பட்ட இம்மையங்கள் மூடப்பட்டு, குழந்தைகளுக்கு கற்பித்தல் செய்ய இயலாத நிலை உள்ளது. ஆர்வமாக படித்த குழந்தைகள், அவர்களது பெற்றோர்களும், மீண்டும் இம்மையத்தை செயல்படுத்தி, இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்த கேட்டு வருகின்றனர். கல்வி வளர்ச்சியை காரணமாக கொண்டு, இத்திட்டத்தை முடக்காமல் தொடர உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.