/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஸ்ரெட்ச்சர் வழங்காத விவகாரத்தில் இருவர் சஸ்பெண்ட்; ஒருவர் மாற்றம் ஸ்ரெட்ச்சர் வழங்காத விவகாரத்தில் இருவர் சஸ்பெண்ட்; ஒருவர் மாற்றம்
ஸ்ரெட்ச்சர் வழங்காத விவகாரத்தில் இருவர் சஸ்பெண்ட்; ஒருவர் மாற்றம்
ஸ்ரெட்ச்சர் வழங்காத விவகாரத்தில் இருவர் சஸ்பெண்ட்; ஒருவர் மாற்றம்
ஸ்ரெட்ச்சர் வழங்காத விவகாரத்தில் இருவர் சஸ்பெண்ட்; ஒருவர் மாற்றம்
ADDED : ஜூன் 13, 2024 02:15 AM
ஈரோடு:ஈரோடு அரசு மருத்துவமனையில், காயமடைந்து வந்த பெண்ணுக்கு ஸ்ரெட்ச்சர் வழங்காமல், அவரை துாக்கி சென்ற சம்பவம் தொடர்பாக, இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு, பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் சொர்ணா, 80. மே, 27ல் சாலை விபத்தில் காலில் காயம் அடைந்தார். ஆட்டோவில் அழைத்து வரப்பட்ட சொர்ணாவை, அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்ல ஸ்ரெட்ச்சர், வீல்சேர் போன்றவை வழங்கப்படவில்லை. அரசு மருத்துவமனை பணியாளரிடம் கேட்ட போதும் கிடைக்கவில்லை.
இதனால் தன் தாய் சொர்ணாவை, அவரது மகள் வளர்மதி துாக்கி கொண்டே அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே அறைக்கு சென்றார். இதை, அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து பரவச் செய்தனர்.
இதுபற்றி, ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் விசாரித்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கராவுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
கலெக்டர் உத்தரவுப்படி, சம்பவத்தன்று பணியில் இருந்த மருத்துவமனை பணியாளர்கள் பிரகாஷ், முத்துசாமி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அவசர சிகிச்சை பிரிவில் பணி செய்த மைதிலி என்ற பணியாளரை, பவானி அரசு மருத்துவமனைக்கு பணியிட மாறுதல் செய்து, இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் உத்தரவு நகல் வழங்கினார்.