/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கைம்பெண் வீட்டில் திருடிய இருவர் கைது கைம்பெண் வீட்டில் திருடிய இருவர் கைது
கைம்பெண் வீட்டில் திருடிய இருவர் கைது
கைம்பெண் வீட்டில் திருடிய இருவர் கைது
கைம்பெண் வீட்டில் திருடிய இருவர் கைது
ADDED : ஜூலை 19, 2024 01:44 AM
ஈரோடு: ஈரோடு அருகே கஸ்பாபேட்டை, குமரன் கார்டனை சேர்ந்த ராஜேஸ்வரன் மனைவி நாகேஸ்வரி, 52; இவர்களின் மகன் சந்தோஷ் குமார். மனைவியுடன் செட்டிபாளையத்தில்
வசிக்கிறார். கணவன் இறந்ததால் நாகேஸ்வரி சொந்த வீட்டில் தனியே வசிக்கிறார். மகன் வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் வந்தபோது, 14 பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. புகா-ரின்படி தாலுகா போலீசார் விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக ஈரோடு, குறிக்காரன் பாளையம், நேதாஜி நகரை சேர்ந்த இம்ரான்சா மகன் டிரைவர் அசேன் (எ) ஜிப்ருல்லா, 30; பாலக்காடு, பள்ளிவாசலை சேர்ந்த சையது முஸ்தபா (எ) சேட்டு, 49, ஆகியோரை, ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3.5 பவுன் நகை மீட்கப்பட்டது. நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில், இருவரும் அடைக்கப்பட்டனர்