வீடு புகுந்து திருடிய இருவர் கைது
வீடு புகுந்து திருடிய இருவர் கைது
வீடு புகுந்து திருடிய இருவர் கைது
ADDED : ஜூன் 06, 2024 03:59 AM
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள மூலனுார், மூலப்பாளையத்தை சேர்ந்தவர் முத்து.
கடந்த மே, 31ல், இவரது வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 10 பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர். தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் மூலனுார் பஸ் நிலையம் அருகே, சந்தேகத்திற்கு இடமான வகையில், ஸ்கூட்டியில் சுற்றித்திரிந்த இருவரை விசாரித்தனர். அப்போது அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.இதையடுத்து அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்த போது, சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியை சேர்ந்த ராமலிங்கம், 42, கீழத்துார் அழகர்சாமி, 30, என்பதும், மூலப்பாளையம் முத்து வீட்டில், நகை, பணத்தை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.