/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மேட்டூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் மேட்டூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
மேட்டூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
மேட்டூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
மேட்டூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூலை 19, 2024 01:48 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலசான சாலைகளில் மேட்டூர் சாலையும் ஒன்று. இதுவரை அகில்மேடு நான்காவது வீதியில் இருந்து முனிசிபல் காலனி ஜங்ஷனை கிராஸ் செய்து, முனிசிபல் காலனிக்குள் வாகனங்கள் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. சாலையை கடக்க முயற்சிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தது.
இதை தவிர்க்கும் விதமாக சாலையை கிராஸ் செய்வது, முனி-சிபல் காலனி ஜங்ஷன் பகுதியில் யூ டார்ன் எடுப்பதை தவிர்க்கும் விதமாக, சாலை தடுப்பு வைக்கப்
பட்டுள்ளது.
இதனால் அகில்மேடு நான்காவது வீதியில் இருந்து வரும் வாக-னங்கள், ஜி.ஹெச்.ரவுண்டானா சென்று அதன் பின் மேட்டூர் சாலையில் பயணித்து, முனிசிபல் காலனி ஜங்ஷனை அடைந்து, அங்கிருந்து தங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல, ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார் வழிவகை செய்துள்-ளனர்.