/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அமெரிக்கா சென்றவர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு அமெரிக்கா சென்றவர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு
அமெரிக்கா சென்றவர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு
அமெரிக்கா சென்றவர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு
அமெரிக்கா சென்றவர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு
ADDED : ஜூன் 12, 2024 06:51 AM
சென்னிமலை: சென்னிமலையில் வெள்ளோடு ரோடு, அசோகபுரம், சரவணா கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம், 75; இவரின் மகன் அமெக்காவில் வசித்து வருகிறார். மனைவி இந்திராணி மகனுடன் உள்ளார்.
பாலசுந்தரம் தனியாக வசித்து வருகிறார். கடந்த மாதம், 27ம் தேதி மகன் வீட்டுக்கு பாலசுந்தரம் சென்றார். வீட்டில் உள்ள பூச்செடிகளை பராமரிக்க, பழனிசாமி என்பவரை நியமித்துள்ளார்.
நேற்று காலை தண்ணீர் பாய்ச்ச அவர் வந்தார். அப்போது வெளிகேட் பூட்டியிருக்க உள் மெயின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஈரோட்டில் வசிக்கும் உள்ள பாலசுந்தரம் அண்ணன் மகள் சிமளாவுக்கு தகவல் தரப்பட்டது. அவர் வீட்டுக்கு சென்று, அமெரிக்காவில் உள்ள பாலசுந்தரத்துக்கு போனில் தகவல் தெரிவித்தார். புகாரின்படி சென்னிமலை போலீசார் வீட்டில் ஆய்வு செய்தனர். இதில், ௧௫ வெள்ளி டம்ளர், ௨ காமாட்சி விளக்கு, வெள்ளி கிண்ணம், வெள்ளியாலான யானை என, 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில், கைவரிசை காட்டிய ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.