ADDED : ஜூலை 10, 2024 02:47 AM
ஈரோடு:தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில் மாநில துணை தலைவர் ஸ்ரீதேவி தலைமையில், ஈரோடு, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று துவக்கினர். மண்டல செயலாளர் ஜோதிமணி துவக்கி வைத்தார்.
மின்வாரியத்தில் அடிமட்ட பதவிகளான கள உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர், தொழில் நுட்ப உதவியாளர், உதவி மின் பொறியாளர், உதவி வரைவாளர் பதவிகள், 33,00க்கும் மேல் காலியாக உள்ளன. தவிர, 20,000க்கும் மேற்பட்ட இதர பதவிகள் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்ப வேண்டும். மின்வாரிய பிரிப்பு குறித்த அரசாணை -6, 7ஐ கைவிட வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி, 10 ஆண்டுக்கு மேல் மின் வாரியத்தில் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் ஜெயகுமார், விஸ்வநாதன், லோகசாமி, ரகுராமன், முனுசாமி, விஜயராகவன் உட்பட பலர் பேசினர்.
இதேபோல் கோபி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த காத்திருப்பு போராட்டத்துக்கு சேகர் தலைமை வகித்தார்.