Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வீடுகளை வழங்காமல் இழுத்தடிப்பு அன்னை சத்யா நகர் மக்கள் கொதிப்பு

வீடுகளை வழங்காமல் இழுத்தடிப்பு அன்னை சத்யா நகர் மக்கள் கொதிப்பு

வீடுகளை வழங்காமல் இழுத்தடிப்பு அன்னை சத்யா நகர் மக்கள் கொதிப்பு

வீடுகளை வழங்காமல் இழுத்தடிப்பு அன்னை சத்யா நகர் மக்கள் கொதிப்பு

ADDED : ஜூலை 02, 2024 07:21 AM


Google News
ஈரோடு : ஈரோடு, பீ.பி.அக்ரஹாரம், அன்னை சத்யா நகர் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்தவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:

அன்னை சத்யா நகரில் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்து வந்தோம். 30 ஆண்டுகள் கடந்ததால், வீட்டில் இருந்து காலி செய்தனர். அப்போது, 8,000 ரூபாய் நிவாரணம் வழங்கி, விரைவில் புதிய வீடு கட்டியதும், வீடு வழங்கப்படும் என்றனர். இதுகூட சில பயனாளிகளுக்கு மட்டுமே கிடைத்தது. இந்நி-லையில், 2019ல் அங்கிருந்த, 228 வீடுகளை இடித்துவிட்டு, கூடுதல் வசதியுடன், 330 அடுக்குமாடி வீடுகள் கட்டி முடித்து ஓராண்டாகிறது.

நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து கொண்டு, வாடகை வீடுகளில் பல்வேறு இடங்களில் வசித்து வருகிறோம். தற்போது அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, ஓராண்டு ஆகியும், வழங்க-வில்லை. இவ்வீடு பெற, 66,015 ரூபாய் பயனாளிகள் பங்குத்-தொகையை செலுத்தினால் வீடு தருவதாக கூறினர். சிலர் அத்-தொகையை செலுத்தியும் ஒதுக்கவில்லை.

தண்ணீர் இணைப்பு வந்ததும் தருவதாக கூறி, இணைப்பும் வந்து-விட்டது. தற்போது 'லிப்ட்' அமைத்த பிறகுதான் தருவோம், என இழுத்தடிக்கின்றனர். வாடகை வீடுகளில் வாடகை செலுத்த முடி-யாமலும், 66,015 ரூபாய் வட்டிக்கு வாங்கி செலுத்திவிட்டு, அதற்கான வட்டியை கொடுக்க முடியாமலும் சிரமப்படுகிறோம். அங்கு ஏற்கனவே வசித்த அனைத்து பயனாளிகளுக்கும் உடன் வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்-ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us