Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாய் உயிரிழந்த அதிர்ச்சியால் மாரடைப்பில் மகளும் மரணம்

தாய் உயிரிழந்த அதிர்ச்சியால் மாரடைப்பில் மகளும் மரணம்

தாய் உயிரிழந்த அதிர்ச்சியால் மாரடைப்பில் மகளும் மரணம்

தாய் உயிரிழந்த அதிர்ச்சியால் மாரடைப்பில் மகளும் மரணம்

ADDED : ஜூலை 31, 2024 09:50 PM


Google News
புன்செய் புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, பாரதி வீதியை சேர்ந்தவர் கண்ணம்மாள், 81. கணவர் ரங்கசாமி இறந்துவிட்ட நிலையில், மகன்களுடன் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்தனர்.

வயது மூப்பு காரணமாக, கண்ணம்மாள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். தன் தாயை பார்ப்பதற்காக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து மகள் சாந்தி, 60, நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்துள்ளார்.

உடல்நிலை மோசமடைந்து நேற்று முன்தினம் இரவு கண்ணம்மாள் காலமானார். தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகள் சாந்திக்கு, நெஞ்சு வலி ஏற்பட்டு அவரும், தாய் உயிரிழந்த அதே இடத்தில் இறந்துள்ளார்.

தாய், மகள் உயிரிழந்ததை கண்டு குடும்பமே கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. நேற்று மாலை இருவரது உடல்களும், புன்செய்புளியம்பட்டி எரியூட்டு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us