ADDED : ஜூன் 24, 2024 02:57 AM
ஈரோடு;பிளஸ் 2 துணைத்தேர்வு, மொழி பாடத்துடன் இன்று துவங்குகிறது.
நாளை ஆங்கில தேர்வு நடக்கிறது. ஜூலை 1ல் தேர்வு நிறைவு பெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம் காமராஜ் மாநகராட்சி மேல்நிலை பள்ளி, பவானி பெண்கள் அரசு மேல்நிலை பள்ளி, கோபி அமலா மேல்நிலை பள்ளி, சத்தி சாரு மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச்சில் நடந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வு எழுதாதவர்கள், தனி தேர்வர்கள் இதில் பங்கேற்பர்.