Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெருமாள் மலை கோவிலுக்கு மலைப்பாதை அமைக்க ஆய்வு

பெருமாள் மலை கோவிலுக்கு மலைப்பாதை அமைக்க ஆய்வு

பெருமாள் மலை கோவிலுக்கு மலைப்பாதை அமைக்க ஆய்வு

பெருமாள் மலை கோவிலுக்கு மலைப்பாதை அமைக்க ஆய்வு

ADDED : ஜூலை 03, 2024 02:44 AM


Google News
ஈரோடு:ஈரோடு- அருகே பவானி சாலையில் பெருமாள் மலையில், 1,500 ஆண்டுகள் பழமையான மங்களகிரி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி, சித்திரை மாதத்தில் நடக்கும் விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

சனிக்கிழமைகளிலும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். மலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, 450க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும். இந்நிலையில் மலைப்பாதை அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் செயல் அலுவலர் கயல்விழி தலைமையில், வல்லுனர்கள் குழு, பெருமாள் மலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'வல்லுனர் குழு தாக்கல் செய்யப்படும் திட்ட அறிக்கை, ஆணையருக்கு அனுப்பி ஒப்புதல் கிடைத்த பிறகு, பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும்.

இருசக்கர வாகனங்கள், கார் மட்டுமே செல்லும் வகையில், பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us