/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போட்டோகிராபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது போட்டோகிராபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
போட்டோகிராபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
போட்டோகிராபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
போட்டோகிராபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
ADDED : ஜூலை 10, 2024 02:50 AM
ஈரோடு;ஈரோடு, ஈ.பி.பி.நகர், ராம்நகர் முதல் வீதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன், 30; திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் எடுக்கும் போட்டோகிராபர்.
நண்பர்களான பெரியசேமூர் எம்.ஜி.ஆர்.நகர் சூர்யபிரகாஷ், 22, நித்திஷ்வரன், 23; ஈ.பி.பி.நகரை சேர்ந்த தேவராஜ், 21; மூவரும் கனிராவுத்தர் குளம் பகுதியில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது லோகேஸ்வரன் கூடுதலாக மது வாங்கி வர சொன்னதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சூர்யபிரகாஷ் தன்னிடம் இருந்த கத்தியால் லோகேஸ்வரனின் பின் கழுத்தில் குத்தினார். மற்ற இருவரும் கைகளால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த லோகேஸ்வரன், ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்படி வழக்குப்பதிந்த வீரப்பன்சத்திரம் போலீசார், மூவரையும் நேற்று கைது செய்தனர்.