/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த இடம் தேர்வு தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த இடம் தேர்வு
தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த இடம் தேர்வு
தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த இடம் தேர்வு
தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த இடம் தேர்வு
ADDED : ஜூலை 17, 2024 02:18 AM
கோபி:கோபி பெரியார் திடல் எதிரே, நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கிய, கோபி தீயணைப்பு நிலையம், 2021 செப்., மாதம் முதல், கரட்டடிபாளையம் அருகே சோமு நகரில், தனியார் இடத்தில் வாடகையில் செயல்படுகிறது.
தீயணைப்பு நிலையம் கட்ட, கோபி டவுன் பகுதியில், பல ஆண்டுகளாக இடம் தேடினர். தற்போது புறநகர் பகுதியான பொலவக்காளிபாளையத்தில், தீயணைப்பு துறையினருக்கு, குடியிருப்புடன் கூடிய நிலைய அலுவலம் கட்டமைக்க, 45 சென்ட் இடத்தை தேர்வு செய்து, மாவட்ட நிர்வாகம் முன் நுழைவு அனுமதி வழங்கியுள்ளது. அந்த இடத்தில் கட்டடம் கட்ட துறை ரீதியாக கடிதம் அனுப்பியுள்ளனர்.