/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வேளாண் பொறியியல் சார்பில் ரூ.3.56 கோடி மானியம் வேளாண் பொறியியல் சார்பில் ரூ.3.56 கோடி மானியம்
வேளாண் பொறியியல் சார்பில் ரூ.3.56 கோடி மானியம்
வேளாண் பொறியியல் சார்பில் ரூ.3.56 கோடி மானியம்
வேளாண் பொறியியல் சார்பில் ரூ.3.56 கோடி மானியம்
ADDED : மார் 12, 2025 08:17 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நடப்பாண்டில், 226 விவசாயிகளுக்கு, 3.56 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மனோகரன் கூறியதாவது: வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைத்தல், வேளாண் கருவிகள் வாங்குதலுக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. 25 லட்சம் ரூபாய் செலவில் வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க, 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். தனிப்பட்ட விவசாயிகளுக்கு, 40 முதல், 50 சதவீதமும், குழுக்களுக்கு, 40 முதல், 80 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் இதுவரை, 226 விவசாயிகளுக்கு இதுபோன்ற கருவிகள் வாங்க, 3 கோடியே, 56 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.