/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 13ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் 13ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
13ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
13ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
13ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
ADDED : ஜூலை 09, 2024 02:39 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் வரும், 13ம் தேதி, 10 தாலுகா அலுவலகத்திலும் தலா ஒரு ரேஷன் கடையில் நடக்க உள்ளது.
புது ரேஷன் கார்டு பெற மனு வழங்குதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தலுக்கு மனு வழங்கி தீர்வு பெறலாம். இதன்படி தாலுகா வாரியாக ஈரோடு - எல்லப்பாளையம் ரேஷன் கடை, பெருந்துறை - சென்னிமலை எம்.பி.என்.நகர், மொடக்குறிச்சி - நகராட்சி நகர், கொடுமுடி - தாமரைபாளையம், கோபி - கூகலுார், நம்பியூர் - ஒழலக்கோவில், பவானி - பெருந்தலையூர், அந்தியூர் - பர்கூர் ஊசிமலை, சத்தியமங்கலம் - கொமராபாளையம், தாளவாடி - பழைய ஹாசனுாரில் உள்ள ரேஷன் கடையில் முகாம் நடக்கிறது.