/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அனுமதி பெறாமல் நடப்பட்ட அரசியல் கட்சி கொடி கம்பம் அனுமதி பெறாமல் நடப்பட்ட அரசியல் கட்சி கொடி கம்பம்
அனுமதி பெறாமல் நடப்பட்ட அரசியல் கட்சி கொடி கம்பம்
அனுமதி பெறாமல் நடப்பட்ட அரசியல் கட்சி கொடி கம்பம்
அனுமதி பெறாமல் நடப்பட்ட அரசியல் கட்சி கொடி கம்பம்
ADDED : ஜூன் 10, 2024 01:29 AM
ஈரோடு: லோக்சபா தேர்தல் விதியால், ஈரோடு மாநகர சாலையோரங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை, அந்தந்த கட்சியினரே அகற்றி கொண்டனர். நடத்தை விதிகள் வாபசான நிலையில், அகற்றப்பட்ட இடங்களில் கொடி கம்பங்களை வைத்து கொள்ள, கட்சியினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம் புதியதாக கம்பம் நடுவதாக இருந்தால், அரசியல் கட்சியினர் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாநகரில் குறிப்பாக டவுன் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எட்டு இடங்களில், எவ்வித அனுமதியும் பெறாமல், கொடி கம்பங்களை நேற்று காலை நட்டு வைத்து கொடியேற்றினர். இது தெரிந்தும் போலீசார் மவுனம் காத்து வருகின்றனர். குறைந்தபட்சம் அனுமதியின்றி கொடி கம்பம் நட்டு வைத்ததற்கு வழக்குகள் கூட பதிவு செய்யாததும், பிற கட்சியினர் மத்தியில், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.