/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிராம சாலையை தரமாக அமைக்க வலியுறுத்தி மனு கிராம சாலையை தரமாக அமைக்க வலியுறுத்தி மனு
கிராம சாலையை தரமாக அமைக்க வலியுறுத்தி மனு
கிராம சாலையை தரமாக அமைக்க வலியுறுத்தி மனு
கிராம சாலையை தரமாக அமைக்க வலியுறுத்தி மனு
ADDED : ஜூலை 09, 2024 02:35 AM
ஈரோடு;பவானி தாலுகா பெருந்தலையூர், செரையாம்பாளையத்தை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:
முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், பெருந்தலையூர், பவானி சாலையில் இருந்து கரை எல்லப்பாளையம் சாலை வரை தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. செரையாம்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல், சாலை அமைக்கப்படுகிறது.
இத்தார்சாலையை முறையாகவும், தரமாகவும் அமைக்க முடியாது. இதனால் குறிப்பிட்ட பகுதியில் வாகனங்கள், மக்கள் செல்லும் போது சிரமம் ஏற்படும். இவ்விடங்களை முழுமையாக மாவட்ட அதிகாரி ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புக்களை அகற்றி, தரமாக அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.