வண்டல் மண் அள்ள அனுமதி கேட்டு மனு
வண்டல் மண் அள்ள அனுமதி கேட்டு மனு
வண்டல் மண் அள்ள அனுமதி கேட்டு மனு
ADDED : மார் 12, 2025 08:16 AM
பவானிசாகர்: பவானிசாகர் அணைநீர் தேக்கத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க கோரி, பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனு விபரம்:
மாவட்டம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களில் உள்ள வண்டல் மண் எடுக்க கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வண்டல் மண் அள்ள அனுமதி வேண்டும். தற்போது அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதால், வண்டல் மண் எடுப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.