/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாநகராட்சியுடன் பஞ்., இணைப்பு;யோசனைக்கு மா.கம்யூ., எதிர்ப்பு மாநகராட்சியுடன் பஞ்., இணைப்பு;யோசனைக்கு மா.கம்யூ., எதிர்ப்பு
மாநகராட்சியுடன் பஞ்., இணைப்பு;யோசனைக்கு மா.கம்யூ., எதிர்ப்பு
மாநகராட்சியுடன் பஞ்., இணைப்பு;யோசனைக்கு மா.கம்யூ., எதிர்ப்பு
மாநகராட்சியுடன் பஞ்., இணைப்பு;யோசனைக்கு மா.கம்யூ., எதிர்ப்பு
ADDED : ஜூலை 09, 2024 02:38 AM
ஈரோடு;ஈரோடு மா.கம்யூ., கட்சி தாலுகா செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் வழங்கிய மனுவில் கூறியதாவது: ஈரோடு யூனியனில், எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம், கதிரம்பட்டி, பேரோடு, பிச்சாண்டம்பாளையம், கூரப்பாளையம் என, 6 பஞ்சாயத்துக்கள் அடங்கியுள்ளது.
இவற்றில், 78 குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமங்கள் அனைத்தும் விவசாயம் நிறைந்த பகுதி. அவற்றில், 3, 4 மாதங்கள் மட்டுமே பிற வேலை கிடைக்கும். மற்ற மாதங்களில் விவசாயத்தை நம்பியே தொழிலாளர்கள் உள்ளனர். அதிலும், 100 நாள் வேலை திட்டப்பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பஞ்சாயத்துக்களை முழுமையாக மாநகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை திட்டம் முற்றிலும் ரத்தாகும். பஞ்சாயத்துக்களாக நீடித்தால் மட்டுமே விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். எனவே இந்த பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைக்கும் யோசனையை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.