ADDED : ஆக 04, 2024 01:34 AM
ஈரோடு, ஈரோடு, நாராயணவலசு, இந்திரா நகர் வாய்க்கால் மேடு பகுதியில், வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது
சந்தேகத்துக்கு இடமாக திரிந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.
கோவை, பாப்பநாயக்கன்பாளையம் குகன், 25; ஈரோடு, இடையன்காட்டு வலசு கவின்குமார், 28; ஈரோடு, நாராயணவலசு, வாய்க்கால் மேடு ஜெகநாதன், 24, என்பது தெரிந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தனர். மூவரையும் கைது செய்த போலீசார், 100 வலி நிவாரண மாத்திரை, 10 சிரிஞ்சுகளை பறிமுதல் செய்தனர்.