/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சந்துக்கடையில் மது விற்பனை: சத்தி அருகே மறியல் சந்துக்கடையில் மது விற்பனை: சத்தி அருகே மறியல்
சந்துக்கடையில் மது விற்பனை: சத்தி அருகே மறியல்
சந்துக்கடையில் மது விற்பனை: சத்தி அருகே மறியல்
சந்துக்கடையில் மது விற்பனை: சத்தி அருகே மறியல்
ADDED : ஜூலை 12, 2024 01:37 AM
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதுாரில், டாஸ்மாக் கடை திறக்கும் முன் மது விற்பனை நடக்கிறது.
நேற்று காலை வழக்கம்போல் மதுவை வாங்கிய சிலர், அப்பகுதி ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த வாகனத்தில் அமர்ந்து குடித்துள்ளனர். இதைப்பார்த்த வாகன உரிமையாளர்கள் கண்டிக்கவே இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த, ௫௦க்கும் மேற்பட்டோர் கள்ள மது விற்பனையை தடுக்க வேண்டும் என்று கூறி, சத்தி-கோவை சாலையில், மறியலில் ஈடுபட்டனர். சத்தி போலீசார், அப்போது அந்த வழியாக சென்ற சத்தி தாசில்தார் சக்திவேல், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே, மக்கள் மறியலை கைவிட்டனர். இதனால், 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.