/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை மலை கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா சென்னிமலை மலை கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா
சென்னிமலை மலை கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா
சென்னிமலை மலை கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா
சென்னிமலை மலை கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா
ADDED : ஜூன் 19, 2024 02:13 AM
சென்னிமலை:சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.கோவிலில் கடந்த, 2014ல் கும்பாபிஷேகம் நடந்தது. 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, கும்பாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. சிறப்பு யாக வேள்வி பூஜை, பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து பால், தயிர் உட்பட, 16 வகை திரவியங்கள் மூலம் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பிறகு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.