/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மனைவியை பார்க்க சென்ற கணவன் கிணற்றில் மூழ்கி பலி மனைவியை பார்க்க சென்ற கணவன் கிணற்றில் மூழ்கி பலி
மனைவியை பார்க்க சென்ற கணவன் கிணற்றில் மூழ்கி பலி
மனைவியை பார்க்க சென்ற கணவன் கிணற்றில் மூழ்கி பலி
மனைவியை பார்க்க சென்ற கணவன் கிணற்றில் மூழ்கி பலி
ADDED : மார் 12, 2025 08:15 AM
வெள்ளகோவில்: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள ஊத்தம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி, 52; இவரின் மனைவி அன்னக்கொடி, 47; இவரின் பெற்றோர் திருப்பூர் மாவட்டம் முத்துார் அருகே சென்னாக்கல்மேடு, இடையன்காட்டு தோட்டத்தில் வசிக்கின்றனர். அன்னக்கொடி தனது தாய்வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வேலுச்சாமி மனைவியை பார்க்க வந்தார்.
அன்று மாலை அருகிலிருந்த விவசாய கிணற்றில் வேலுச்சாமி மற்றும் சிறுவர்கள் குளித்தனர். வேலுச்சாமி தவிர மற்றவர்கள் அனைவரும் வீடு திரும்பி விட்டனர். இதனால் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடியபோது வேலுச்சாமி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.