/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவீரன் பொல்லான் வீர வரலாறு பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் மாவீரன் பொல்லான் வீர வரலாறு பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்
மாவீரன் பொல்லான் வீர வரலாறு பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்
மாவீரன் பொல்லான் வீர வரலாறு பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்
மாவீரன் பொல்லான் வீர வரலாறு பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்
ADDED : ஜூலை 18, 2024 01:59 AM
ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் வீர வரலாற்றை, கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என, சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின், ௨௧9ம் ஆண்டு நினைவு தினம், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான, அறச்-சலுார் அருகே நல்லமங்காபாளையத்தில் அனுசரிக்கப்பட்டது. நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு, சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் தலைமை வகித்தார். மாவீரன் பொல்லான் பேரவை பொதுச்செய-லாளர் சண்முகம், துணைத்தலைவர் ஆறுமுகம், தலைமை நிலைய செயலாளர் கண்ணையன், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் முத்துசாமி, எம்.பி., அந்தியூர் செல்வராஜ் மற்றும் பலர் ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லானுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின், மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் நிருபர்களிடம் கூறுகையில்,''சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் சுட்டுக்கொல்லப்பட்ட நல்லமங்காபாளையத்தில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும். பொல்லானின் வீர வர-லாற்றை கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கூடுதல் கட்-டடத்துக்கு மாவீரன் பொல்லான் மாளிகை என பெயர் சூட்ட வேண்டும்,'' என்றார்.