அரசு கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 17, 2024 02:21 AM
அந்தியூர்,;அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 30௦க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதி இல்லை. இதுகுறித்து கல்லுாரி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், நேற்று மாலை கல்லுாரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லுாரி நிர்வாகத்தினர் உறுதியால் அனைவரும் கலைந்து சென்றனர்.