/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டிரைவரை பீர் பாட்டிலால்தாக்கிய நான்கு பேர் கைது டிரைவரை பீர் பாட்டிலால்தாக்கிய நான்கு பேர் கைது
டிரைவரை பீர் பாட்டிலால்தாக்கிய நான்கு பேர் கைது
டிரைவரை பீர் பாட்டிலால்தாக்கிய நான்கு பேர் கைது
டிரைவரை பீர் பாட்டிலால்தாக்கிய நான்கு பேர் கைது
ADDED : ஜூலை 09, 2024 02:34 AM
ஈரோடு;நாமக்கல், பள்ளிபாளையம், ஒட்டமெத்தையை சேர்ந்தவர் ராமன், 27; திண்டல் முருகன் ஸ்டீல் கம்பெனி டிரைவர்.
கடந்த, 4ம் தேதி மாலை கடையில் ராமன் இருந்தார். அப்போது மழை பெய்ததால் நனைந்து விட்ட நான்கு பேர், கடைக்குள் புகுந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததால் வெளியே செல்லுமாறு ராமன் கூறினார். இதனால் நால்வரும் ராமனை பீர் பாட்டிலால் தாக்கினர். அங்கிருந்த ஆடிட்டர் சந்திரசேகரையும் தாக்கி விட்டு ஓடினர். புகாரின்படி வழக்குப்பதிந்த வீரப்பன்சத்திரம் போலீசார், நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட வீரப்பன் சத்திரம், கொத்துக்காரர் தோட்டம் தமிழ்செல்வன், 29, வெங்கடேஷ், 29; ஈரோடு, அசோகபுரம், தேவராயன் காடு சத்தியபிரகாஷ், 24, ஐயன்காடு அரவிந்த், 19, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.