/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீயணைப்பு நிலைய அலுவலர் ஐந்து நிலையங்களில் இல்லை தீயணைப்பு நிலைய அலுவலர் ஐந்து நிலையங்களில் இல்லை
தீயணைப்பு நிலைய அலுவலர் ஐந்து நிலையங்களில் இல்லை
தீயணைப்பு நிலைய அலுவலர் ஐந்து நிலையங்களில் இல்லை
தீயணைப்பு நிலைய அலுவலர் ஐந்து நிலையங்களில் இல்லை
ADDED : ஜூன் 24, 2024 02:53 AM
ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் ஐந்து தீயணைப்பு நிலையங்களில், அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, ஆசனுார், நம்பியூரில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஈரோட்டில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையிலும், பிற இடங்களில் நிலைய அலுவலர்கள் தலைமையிலும் செயல்படுகிறது. இதில் மொடக்குறிச்சி, கொடுமுடி, அந்தியூர், ஆசனுார், நம்பியூரில் பல மாதங்களாக நிலைய அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. இதேபோல் ஈரோட்டில் உதவி தீயணைப்பு அலுவலர் பணியிடம் நான்கு மாதங்களாக காலியாக உள்ளது. இதனால் அவசர காலங்களில் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில், சிக்கல் ஏற்படுவதாக, ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.