/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு சென்னிமலை அருகே விவசாயிகள் மறியல் வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு சென்னிமலை அருகே விவசாயிகள் மறியல்
வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு சென்னிமலை அருகே விவசாயிகள் மறியல்
வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு சென்னிமலை அருகே விவசாயிகள் மறியல்
வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு சென்னிமலை அருகே விவசாயிகள் மறியல்
ADDED : ஜூலை 26, 2024 02:47 AM
சென்னிமலை: சென்னிமலை அருகே பசுவபட்டி ஊராட்சியில், கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணி மூன்று நாளாக நடந்து வருகிறது.
அரசாணையில் அறிவித்தபடி இல்லாமல் இரு கரைகளிலும், 200 மீட்டர் துாரத்துக்கு கான்கிரீட் சுவர் அமைப்பதாக கூறி, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முன்தினம் பணியை தடுத்து நிறுத்தினர். நேற்று மீண்டும் பணி நடந்ததால், வெகுண்ட பொதுமக்கள், விவசாயிகள், சென்னிமலை-காங்கேயம் பிர-தான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது. சென்னிமலை போலீசார், பொதுப்பணித்-துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது:
பசுவபட்டி ஊராட்சியில் வாய்க்காலின் இடது கரையில், 20 மீட்டர் நீளத்துக்கு மட்டும் பக்கவாட்டு கான்கிரீட் சுவர் அமைக்க அரசாணை உள்ளது. ஆனால், 200 மீ., நீளத்துக்கு பக்கவாட்டு சுவர் அமைக்க பணி நடக்கிறது. இப்படி அமைத்தால் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும். அதேசமயம் வலது கரையில் பக்க-வாட்டு சுவர் அமைக்க எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. இவ்-வாறு கூறினர். இதை தொடர்ந்து இடது கரையில் கான்கிரீட் அமைக்கப்படாது என அதிகாரிகள் உறுதி கூறவே மறியலை கைவிட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.