Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிணற்றில் பாய்ந்த கார் விவசாயி மீனவர் பலி

கிணற்றில் பாய்ந்த கார் விவசாயி மீனவர் பலி

கிணற்றில் பாய்ந்த கார் விவசாயி மீனவர் பலி

கிணற்றில் பாய்ந்த கார் விவசாயி மீனவர் பலி

ADDED : மார் 15, 2025 02:16 AM


Google News
Latest Tamil News
சத்தியமங்கலம்:சத்தி அருகே கிணற்றில் கார் பாய்ந்த விபத்தில் விவசாயி பலியான நிலையில், அவரை மீட்க முயன்ற மீனவரும் இறந்தார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதுார், முள்ளிக்காபாளையத்தைச் சேர்ந்த விவசாயி யுவராஜ், 42.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த காரை பின்புறமாக எடுத்தபோது, தடுப்பு சுவரை உடைத்து, 50 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. சத்தியமங்கலம் போலீசார், தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

கிணற்றில், 40 அடிக்கு தண்ணீர் இருந்ததால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தேடும் பணிக்கு மூன்று மீனவர்களை வரவழைத்தனர்.

காரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி, இருவர் மேலே வந்து விட்ட நிலையில், பவானிசாகரை சேர்ந்த மூர்த்தி, 45, வெகுநேரமாகியும் மேலே வரவில்லை.

நேற்று அதிகாலை மோட்டார் வைத்து தண்ணீரை முழுதும் வெளியேற்றினர். பின்னர், கிரேன் உதவியுடன் கிணற்றில் கிடந்த காரை மீட்டனர். காருக்குள் யுவராஜ் சடலமாக கிடந்தார். மீனவர் மூர்த்தியும் சடலமாக மீட்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us