/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொடக்க கல்வி ஆசிரியர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் தொடக்க கல்வி ஆசிரியர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
தொடக்க கல்வி ஆசிரியர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
தொடக்க கல்வி ஆசிரியர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
தொடக்க கல்வி ஆசிரியர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 02:41 AM
ஈரோடு;தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில், பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், ஈரோடு காளைமாட்டு சிலை பாலசுப்பராயலு வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துராமசாமி தலைமை வகித்தார்.
தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பறிக்கும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்-243ஐ ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதலுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.