ADDED : ஜூலை 22, 2024 11:56 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய சுரேஷ்குமார், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தாம்பரம், மணிமங்கலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய ராஜபாண்டியன், ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி.,யாக நியமித்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.