/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீதிமன்ற உத்தரவை மீறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி நீதிமன்ற உத்தரவை மீறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி
நீதிமன்ற உத்தரவை மீறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி
நீதிமன்ற உத்தரவை மீறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி
நீதிமன்ற உத்தரவை மீறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி
ADDED : ஜூன் 23, 2024 02:43 AM
புன்செய்புளியம்பட்டி;புன்செய்புளியம்பட்டி நகராட்சி 13 மற்றும் 14வது வார்டு பகுதியில் மழை நீர் ஓடை செல்கிறது. இதில் தற்போது நகராட்சி குடியிருப்பு கழிவுநீர் கழிப்பதால், கழிவு நீர் ஓடையாகி விட்டது. ஓடையை ஒட்டி அம்மன் நகர், சருகு மாரியம்மன் கோவில் வீதி, தோட்ட சாலை உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர்.
நகராட்சி சார்பில் மழை நீர் ஓடையை ஆக்கிரமித்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக ஓடையின் குறுக்கே, 40க்கும் மேற்பட்ட கான்கிரீட் தொட்டி கட்டும் பணி நடக்கிறது. இதனால் மழை நீர் ஓடையில் மழை நீர் செல்ல முடியாமல், மழை பெய்யும் சமயங்களில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதாக, மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும், நீர்வழி பாதையில் கட்டுமான பணி மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையெல்லாம் மீறி நகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டுள்ளது. மக்களுக்கு பயன்படாத இந்த திட்டத்தை கைவிட்டு, மழை நீர் தடையின்றி தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.