/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குட்டிச்சாத்தான் கல் வீசுவதாக புகார்:காங்கேயம் அருகே தாசில்தார் ஆய்வு குட்டிச்சாத்தான் கல் வீசுவதாக புகார்:காங்கேயம் அருகே தாசில்தார் ஆய்வு
குட்டிச்சாத்தான் கல் வீசுவதாக புகார்:காங்கேயம் அருகே தாசில்தார் ஆய்வு
குட்டிச்சாத்தான் கல் வீசுவதாக புகார்:காங்கேயம் அருகே தாசில்தார் ஆய்வு
குட்டிச்சாத்தான் கல் வீசுவதாக புகார்:காங்கேயம் அருகே தாசில்தார் ஆய்வு
ADDED : ஜூலை 10, 2024 02:44 AM
காங்கேயம்:காங்கேயம் அருகே ஒட்டபாளையம் கிராமத்தில், நுாற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த இரு வாரமாக இரவில், 7:௦௦ மணி முதல் நள்ளிரவு 1:௦௦ மணி வரை தொடர்ந்து வீட்டின் மேல் பகுதியில் கற்கள் விழுந்துள்ளது.
குட்டிச்சாத்தான் கற்களை வீசுவதாக அச்சமடைந்துள்ள மக்கள், அங்குள்ள கருப்பராயன் கோவிலில் இரவில் தஞ்சமடைந்து வருகின்றனர். மக்களின் அச்சத்தால் அப்பகுதியில் போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, மின் விளக்கு பொருத்தியுள்ளனர். ட்ரோன் மூலமும் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே கற்கள் வீசப்பட்டதால் ஏற்பட்ட சேதம் குறித்தும், மக்களின் பாதுகாப்பு குறித்தும், காங்கேயம் தாசில்தார் மயில்சாமி, கிராமத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், கற்கள் வீசப்படும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தாசில்தார் தெரிவித்தார்.