/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: கள் இயக்கம் ஆரூடம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: கள் இயக்கம் ஆரூடம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: கள் இயக்கம் ஆரூடம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: கள் இயக்கம் ஆரூடம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: கள் இயக்கம் ஆரூடம்
ADDED : மார் 15, 2025 07:02 AM

ஈரோடு; “டில்லி, சத்தீஸ்கரை போல தமிழகத்திலும் மதுபான ஊழல் உச்சத்தை தொட்டுள்ளது. அதனால், வரும் 2026ல், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்,” என தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
டில்லி மற்றும் சத்தீஸ்கரை போல, தமிழகத்திலும் மதுபான ஊழல் உச்சத்தை தொட்டுள்ளது. டில்லி மதுபான ஊழல் வழக்கில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கரில் மதுபான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் கைதானார்.
தமிழகத்தில் நிலைமை கொஞ்சம் வேறுபட்டுள்ளது. இங்கு பெரும்பாலான அமைச்சர்களே மதுபான உற்பத்தியாளர்களாக இருப்பதால், ஊழல் உச்சத்தை தொட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடந்த சோதனையில், இது கண்டறியப்பட்டு, 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.
உலகளாவிய நடைமுறைக்கும், அரசியல் சட்டத்துக்கும் மாறாக தமிழகத்தில் மட்டும் தான் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சீமைச் சாராயத்தை அரசே முன்னின்று விற்று வருகிறது.
மதுபான கொள்முதல் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபின், தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ்., கட்சி ஆட்சியை இழந்தது. டில்லியிலும் இதே நிலைமைதான். ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆம் ஆத்மி, அதை இழந்துள்ளது.
அதுபோல, தமிழகத்தில் மக்கள் எண்ணங்களுக்கு மாறாக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கள்ளுக்கு தடை போட்டும், மதுபான ஊழல் ஒழுங்கீனத்துக்கு ஆதரவும் தெரிவித்து வரும் தி.மு.க., ஆட்சியை மக்கள் விரட்டி அடிப்பர். மதுபான ஊழலால் தமிழகத்தில், 2026ல் கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு நல்லசாமி தெரிவித்துள்ளார்.