/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த அழைப்பு கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த அழைப்பு
கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த அழைப்பு
கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த அழைப்பு
கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த அழைப்பு
ADDED : ஆக 06, 2024 01:37 AM
ஈரோடு, திட்டமில்லா பகுதிகளில் கடந்த, 2011 ஜன., 1க்கு முன் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு, வரைமுறைப்படுத்தும் திட்டத்தில், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வரும், 2025 ஜன., 31 வரை, கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிட பகுதியில் அமையும் பட்சத்தில் அனைத்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். www.tcp.org.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இதேபோல் மலைப்பகுதியில், 2016 அக்., 20க்கு முன் விற்பனை செய்யப்பட்ட மனை பிரிவை வரைமுறைப்படுத்தும் கால அவகாசமும், நவ., 20 வரை நீட்டிப்பு செய்துள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர், www.tnlayouthillareareg.in என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம்.