ADDED : ஆக 06, 2024 01:42 AM
காங்கேயம், காங்கேயத்தில் ஸ்ரீஅருள் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருபவர் சதீஸ்குமார், 30; பா.ஜ., தெற்கு ஒன்றிய பொது செயலாளர். இவரிடம் இருசக்கர வாகனத்துக்கு, காங்கேயம் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர், 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
மாதம், 2,400 ரூபாய் வீதம், 21 மாதத்துக்கு தவணை கட்ட வேண்டும். முதல் தவணை செலுத்திய நிலையில் அடுத்த தவணைகளை, சங்கர் கட்டாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தவணை தொகை கேட்டு, சதீஸ்குமார் தன்னை தாக்கியதாக புகார் கூறி, திருப்பூர் அரசு மருத்துவமனையில், சங்கர் சிகிச்சைக்கு
சேர்ந்தார்.
அவர் புகாரின்படி காங்கேயம் போலீசார், சதீஸ்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.