/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வேன் மீது மோதிய ஆட்டோ கணவன் சாவு; மனைவி 'சீரியஸ்' வேன் மீது மோதிய ஆட்டோ கணவன் சாவு; மனைவி 'சீரியஸ்'
வேன் மீது மோதிய ஆட்டோ கணவன் சாவு; மனைவி 'சீரியஸ்'
வேன் மீது மோதிய ஆட்டோ கணவன் சாவு; மனைவி 'சீரியஸ்'
வேன் மீது மோதிய ஆட்டோ கணவன் சாவு; மனைவி 'சீரியஸ்'
ADDED : ஜூலை 19, 2024 01:47 AM
டி.என்.பாளையம்: சத்தியமங்கலம், விண்ணப்பள்ளி, செண்பகப்புதுார், புதுரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார், 32; தனது பார்சல் சர்வீஸ் வேனில், சாதிக் என்பவருடன், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மெடிக்கல் பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.
புஞ்சை துறையம்பாளையம், ஈஸ்வரன் கோவில் அருகே, எதிரே கோபி, நஞ்சகவுண்பாளையத்தை சேர்ந்த ராஜாமணி, 60, ஓட்டி வந்த பயணிகள் ஆட்டோ அதிவேகமாக வேன் மீது மோதியது. இதில் ராஜாமணி பலத்த காயமடைந்தார். அவருடன் வந்த மனைவி மகேஸ்வரிக்கு, வாய் மற்றும் தாடையில் ரத்த காயம் ஏற்பட்டது. தம்பதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராஜாமணி நேற்று அதிகாலை இறந்தார். மகேஸ்வரி அபாய கட்டத்தில் உள்ளார். பங்களாப்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.