/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திருட்டு நடந்த வீட்டில் மீண்டும் திருட முயற்சி திருட்டு நடந்த வீட்டில் மீண்டும் திருட முயற்சி
திருட்டு நடந்த வீட்டில் மீண்டும் திருட முயற்சி
திருட்டு நடந்த வீட்டில் மீண்டும் திருட முயற்சி
திருட்டு நடந்த வீட்டில் மீண்டும் திருட முயற்சி
ADDED : ஜூலை 29, 2024 01:31 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, நேருநகரை சேர்ந்தவர் முருகாயாள், 57; கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். சில நாட்-களுக்கு முன், வெளியூரில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்றவர், நேற்று மதியம் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பணம், நகை இல்லாததால், மர்ம நபர்கள் திரும்பி சென்றுள்ளனர்.
ஆறு மாதங்களுக்கு முன் முருகாயாள் வீட்டின் பூட்டை உடைத்து, ஒரு லட்ச ரூபாயை திருட்டு போனது. இந்நிலையில் மீண்டும் திருட்டு முயற்சி நடந்துள்ளது.
புன்செய்புளியம்பட்டி பகுதியில், கொள்ளை சம்பவம் சர்வ சாதா-ரணமாக நடப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்-ளது.